ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தற்போது ஒரு சில உடன்படிக்கை மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இடைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்த ஒப்பந் தத்தை விரும்பாத சில ஐரோப்பிய நாடுக ளின் ஊடங்கங்கள் டென்னிஸ் விளை யாட்டு மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தி வரு கின்றன. டென்னிஸ் உலகில் ரஷ்யா, உக் ரைன் நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வீரர் - வீராங்கனைகள் விளையாடி வரு கின்றனர். அவர்களில் பெரும்பாலா னோர் பெண்கள் என்ற நிலையில், கடந்த இரண்டு வார காலமாக டென்னிஸ் போட்டிகளின் போது ரஷ்யா, உக்ரைன் வீரர் - வீராங்கனைகளிடையே சண்டை சச்சரவுடன் மோதல் ஏற்பட்டு வருவதாக சில ஐரோப்பிய நாட்டு ஊடங்கங்கள் பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. குறிப்பாக வேறு நாட்டு வீரர் - வீராங்க னைகளுடன் ஏற்பட்ட மோதல் சம்பவங்க ளை போலியாகவும், ஏஐ மூலமாக திரித்தும் ரஷ்யா, உக்ரைன் வீரர்கள் - வீராங்கனைகள் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக டென்னிஸ் மூலம் ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப் பந்தத்தை மீறி மீண்டும் போர் வெடிக்கும் என சமூகவலைத்தளங்களில் போலிச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இரு நாட்டினரும் சமத்து பிள்ளைகள் ரஷ்யா, உக்ரைன் வீரர் - வீராங்கனை களும் சமத்து பிள்ளைகளாக தான் டென்னிஸ் விளையாடி வருகின்றனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் ஒரே மனநிலையில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் புன்னகை யுடன் தான் விளையாடி வருகின்றனர். குறிப்பாக கடந்த 4 ஆண்டுகளில் ரஷ்யா, உக்ரைன் வீரர் - வீராங்கனைகளுக்கு இடையே பெரியளவில் எவ்வித மோதலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.