tamilnadu epaper

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே

வெள்ளை நிறம் பிரகாசமான வெளிச்சம் தரும்.
பசுமை அள்ளி, மகிழ்வை பரிசளிக்கும்
அமைதியின் அருமை, மென்மையாய் நின்று
மனநிறைவைத் தரும் வெள்ளை நிறம்.

வானம் முழுவதும் வெள்ளை மேகங்கள்
கண்ணுக்கு இனிமையான விருந்தளிக்கும் , ப
வெண்ணிற வாசலில், எதிர்பார்ப்பு நீக்கமற முழுமையாகும்

அழுக்கு இல்லாத முழுமையான வெள்ளை நிறம்
தூய்மையின் தோரணம், நம்பிக்கையின் நிழல்
விரல்களில் பதிந்த மெல்லிய சுவடு
வெள்ளை  மென்மை முத்தம்.

காற்றில் குதித்துப் பறக்கும் வெள்ளை பட்டாம் பூச்சி
உணர்வின் சங்கதி, பார்வையின் கவிதை
அழகிய தெளிவில் ஆனந்த மழை
வெள்ளை, உயிரின் வர்ணச் சுவடு!
வெள்ளை உடை அணிந்து சேவை செய்யும் செவிலியரையும் போற்றுவோம்.

உஷா முத்துராமன்