tamilnadu epaper

வேல் வேல் வடிவேல்

வேல் வேல் வடிவேல்

வேல் வேல் வடிவேல் 

வேதாந்த வடிவேல் 

நாதாந்த முனியும் 

நான்மறையும் போற்றும் வேல் 

 

தேவி அவள் தந்த வேல் 

தேவர் மூவர் போற்றும் வேல் 

குழந்தை குமார வேல் 

குன்றுதோரும் நின்ற வேல் 

 

அசுரனை வென்ற வேல் 

அன்னை தந்த சக்தி வேல் 

வேல் முருகன் கொண்ட வேல் 

மால்மறுகன் கண்ட வேல் 

 

வேலன் கை முத்து வேல் 

பாலன் கை ஞான வேல் 

கந்தன் கை வீர வேல் 

கடம்பன் கை வைர வேல் 

 

அகந்தை அழிக்கும் வேல் 

சினத்தை அடக்கும் வேல் 

மனதை மயக்கும் வேல் 

குணத்தை உயர்ந்தும் வேல் 

 

சுடர் வடிவான வேல் 

சண்முக வடிவான வேல் 

சின்னஞ்சிறு ஞான வேல் 

சிங்காரமான வேல் 

 

வெற்றி வேல் வேல் வேல் 

வீர வேல் வேல் வேல் 

சக்தி வேல் வேல் வேல் 

பக்தி வேல் வேல் வேல்