tamilnadu epaper

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மூன்றாம் நாள்

ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மூன்றாம் நாள்

திருவண்ணாமலை 8.4.2025 ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி மூன்றாம் நாள்" சீதா ராமர் திருமணம்" R. விஜயகுமார் R. சசிரேகா குடும்பத்தார் தலைமையில் காலையில் அபிஷேக, ஆராதனைகளுடன் வண்ண மலர்களுடன் அலங்காரத்தில் பார்க்க கண் கொள்ளா காட்சி குருக்கள் கணேஷ் ஐயர், பாலசுப்ரமணி இருவரும் திருமணத்தை வெகு நேர்த்தியாக செய்திருந்தனர். பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சீதா ராமரை வணங்கி அருள் பெற்றனர். சீதாராமன் திருமணம் முடிந்த பிறகு பெண்களுக்கு மஞ்சள், குங்குமம்,தாலிக்கயிறு, வளையல் அனைத்தும் வழங்கினர் பக்தர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. தமிழ்நாடு பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை