tamilnadu epaper

ஸ்ரீ கூத்தாண்டவர் தேர் திருவிழா

ஸ்ரீ கூத்தாண்டவர் தேர் திருவிழா

 திருநங்கைகள், பக்தர்கள் பங்கேற்பு........ திருவண்ணாமலை மாவட்டம் 14.5.2025 மங்களம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் ஸ்ரீ கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 20 நாட்கள் தேர் திருவிழா நடப்பது வழக்கம் தினமும் பூஜையுடன் தொடங்கி கரகம் ஜோடித்தல், ஊர்வலம், இன்னிசை நிகழ்ச்சிகள், பாஞ்சாலி திருமணம், வானவேடிக்கை, கரகாட்டம், கூத்தாண்டவர் பிறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி மற்றும் மிஸ் அழகி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முதல் அழகி போட்டிக்கான பரிசு பெற்றவர் புதுச்சேரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், இரண்டாம் பரிசு பெற்றவர் சென்னையைச் சேர்ந்த ரசிகா, மூன்றாவது பரிசு சென்னையைச் சேர்ந்த வெண்பா ஆகியோர் பரிசு பெற்றனர். வேடந்தவாடி 2025 ஆம் ஆண்டு அழகு போட்டிகள் நடந்தது. தேர் திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு கற்பூரங்களை ஏற்றி நடனமாடி கூத்தாண்டவரை வழிபட்டனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கிடாய் வெட்டி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.