திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஶ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் இந்தியாவில் எங்கு இல்லாத வகையில் எமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ள ஒரே கோவிலாக விளங்கி வருகிறது அவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் மாசிமகத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அந்த வகையில் இந்த வருட திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றுடன் மாசிமக பெருவிழா தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஸ்ரீ வாஞ்சிநாதர் மற்றும் ஸ்ரீ மங்களாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு கோவிலில் இருந்து புறப்பட்டு மேல் தாளங்கள் முழங்க வெளியே வந்து
40 அடி உயரமுள்ள திருத்தேரில் எழுந்தருளி பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.