சீர்காழி ஸ்ரீ சீரடி சாய்பாபா தியான ஆலயத்தில்
சீர்காழி , ஏப் , 07 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள கலியுக தெய்வம் ஸ்ரீ சத்குரு சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராமநவமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்து வரப்பட்டு பக்தர்கள் தங்கள் கரங்களால் பாபாவிற்கு
பால் அபிஷேகம் செய்தார்கள். தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம்,
விருட்சிந்திய ஹோமம், தன்வந்திரி ஹோமம், லெட்சுமி ஹோமம். கண்திருஷ்டி ஹோமம், கடம் புறப்பாடு, கடம் அபிஷேகம் மதிய ஆரத்தி முடிந்து
மஹா அன்னதானம் நடைபெற்றது.