tamilnadu epaper

ஸ்ரீ ராமநவமி அபிஷேகம் ஆராதனை விழா..

ஸ்ரீ ராமநவமி அபிஷேகம் ஆராதனை விழா..


நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஸ்ரீ ராமபத்திர பெருமாள் கோவிலில்.. ஸ்ரீ ராமநவமி அபிஷேகம் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது... முதலில்.. கலசபூஜை செய்யப்பட்டு பஞ்ச சுக்தம் பாராயணம் செய்யப்பட்டு.. ராம லெட்சுமணர் சீதா பிராட்டி ஆஞ்சநேயர் இவர்களுக்கு.. திரவியம் பால் இளநீர் பஞ்சாமிர்தம். சந்தனம் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட கலசநீரை பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்து மஹாதீபாரதனை செய்யப்பட்டது சர்க்கரை பொங்கல் புளி சாதம் சுண்டல் பானகம் நீர் மோர் பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. விழா ஏற்பாடுகள் ராகவ பட்டாச்சாரியா.. காசிநாதன்.. இன்ஜினியர் ரவி.. மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்!