*நெற்றி வியர்வை நிலத்தில் விழ
உலகத்தோர் உண்டிக்காக உழவன்
தன் உலகத்தின் உண்டிக்காக தாய்!
*ஆர்ப்பரிக்கும் அலைகளே
கரையில் குழந்தைகளுடன் விளையாடுகின்றன!
*பொருளாதாரத்திற்காக வெளிநாட்டில் தாய்
அழுத குழந்தை சமாதானமாகிறது
கனவிலே தாயின் அரவணைப்பு!
*தோற்றமும் மறைவும் இருளிலே
ஓடிக் கொண்டேயிருக்கிறோம்
வெளிச்சம் தேடி!
பு. பாரதி கண்ணம்மாள்
தஞ்சாவூர்