குடத்தில் அடைத்த கடலாய் இருக்கிறது எனக்குள்
அந்தக் காதல்!
எனக்குரிய காற்றாய்
சுவாசத்தில் வா!
இதயம் இசைக்கட்டும்
தனிமை ராகத்தை!
மின்னல் விளக்கை
அணையாமல்
பார்த்துக் கொள்,
மேகத்திற்கு இன்று
மழை பிரசவம்!
பறவை விட்டு பிரியும்
சிறகென
உன் விலகளில்
விட்டுப்பிரிகின்றன
உயிர் கிளிகள்!
உன் கண்களை
நிறைகுடம் என்பேன்
காதல்
ததும்புவதால்!
என் மனக்கடலில்
சூரியனாய்
இறங்கு
அந்தியில் சங்கமிக்கலாம்!
வரம் வாங்குவதற்காக
தன்னையே
இழக்கும்
தவவாசியின் காதல்!
பார்வைத் தூறலின்
குளிர்மையில்
மலர்ந்தது
மனத் தோட்ட
உறவு பூக்கள்!
கனவு வயலில்
உரமாக
படிந்திருக்கிறது
நீ எரித்த
சம்மமதச்சாம்பல்!
சொப்பனத் தேரில் சிலையாய் நிலைத்திருக்கும் புன்னகை!
-வெ.தமிழழகன் எம்ஏ.பிஎட்