மாங்கனியின் தேன்நகரம் சேலம் என்று பாடு..மண்மணக்கும் மலைநகரை மாத்தமிழால் பாடு! நித்தம் நித்தம் உழைப்பவர்கள் வாழும் சேலம் பாரு! எத்திசையும் எழில் மிகுந்த சேலம் நகரைப் பாடு!
ஏலகிரி மலையிருந்து தவழ்ந்து வரும் அருவி! இரும்புவளம் நிறைந்த ஊரில் உருவாகும் கருவி!
தார மங்களத்து கலைக்கோவில் நிருவி
தமிழாய்ந்த அறிஞர்களின் சேலம் நகரே வாழி!
பாரதத்தாய் மடிவிழுந்த மாங்கனியே வாழி.. பைந்தமிழ்த் தாய் வாழும்ஊரு சேலம் நகரே வாழி!
எவ்வூரும் போற்றுகின்ற எழில் மிகுந்த ஊராம்!
எழில் மணக்கும் திருக்கோவில் சூழ்ந்திருக்கும் ஊராம்!
கோட்டையிலே மாரியம்மன் கொலுவிருக்கும் ஊராம்
நாட்டுப்பற்றில் தலை நிமிர்ந்த சேலம் மா நகராம்!
நல்ல நல்ல மனங்கள் சூழ நகரும் கலைத் தேராம்!
ஐந்து வழி சாலையிலே அன்பின் முகம் கண்டேன்.. அடர்ந்த மலைத் தொடரினிலே சூழும் மேகம் கண்டேன்! காவிரித்தாய் அணைகடந்து பாய்ந்துவரக் கண்டேன்! கவிஞர்களின் சங்கமத்தை சேலம் நகரில் கண்டேன்!
ஒன்றாக மாநிலத்தின் மக்கள் கூடி வாழ்வார்! அண்டை மாநிலத்தார் திரண்டுவந்து சேர்வார் இயற்கையெழில் சூழ்ந்துவர தென்றல் வந்து தவழும்.. எழில் மிகுந்த சேலம் புகழைச் சங்கத்தமிழ் பாடும்!
*வே.கலயாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?