பசுமையை நேசி

பசுமையை நேசி


பாவையை நேசி.. 

 பறவையை நேசி..

பசுமையை நேசி பாரிலே..!

தேவையை கருதி

திரும்பவும் யோசி

நீரினை ஊற்றுக 

வேரிலே.!


கழனியை நேசி

உழவினை நேசி

கண்களை போலவே பசுமையை..

வழியிலே தழைக்க

வைத்திடு மரங்கள்

வாழ்விலே காணலாம்

வளமையை..


விதைகளை ஊன்று

விடியலை காண

வேலியாய் நின்றே

காப்பாய்..

கதையல்ல தோழா

காணுக 

பசுமையை

காலத்தே பயிரிட்டு சேர்ப்பாய்..


இலைகளும் தழைக்க

மலர்களும் பூக்க..

இயன்றதை செய்வதே

மனிதம்.

நிலையினை உயர்த்த

நிலமெலாம் பசுமை..

விலையிலா இயற்கையே

புனிதம்.


பாலையில் கூட..

பாரையில் நீராய்

ஊறிடும் இயற்கை நீரூற்று

சாலைகள் தோறும்

மழைதரும் மரங்கள்

வேர்களில் தோழா நீர் நீ.. ஊற்று


வே.கல்யாண்குமார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%