சென்னை: தமிழகத்தில் மார்கழி மாதம் பிறப்பதற்கு முன்பே பனியின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. பிரபல வானிலை ஆர்வலர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தென்னிந்தியாவின் மிகவும் குளிர்ந்த மலைப்பிரதேசமாக உதகை முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கை 6.3 டிகிரி செல்சியஸுடன் பின்னுக்குத் தள்ளி, உதகை 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் தென்னிந்தியாவின் அதிக குளிர் பிரதேசமாக திகழ்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதி காலை 19.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டில் முதன்முறையாக சென்னையில் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸுக்கு கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. நாகப்பட்டினம் 19.0 டிகிரி செல்சியஸ் மற்றும் கடலூர் 19.6 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்பநிலைகளைப் பதிவு செய்துள்ளன. உள் மாவட்டங்களில் ஈரோடு மாவட்டத்தின் தாளவாடி 11.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் சமவெளிப் பகுதிகளில் அதிக குளிரைப் பதிவு செய்துள்ளது. மலைப்பிரதேசங்களில் கொடைக்கானல் 6.6 டிகிரி செல்சியஸ், மூணாறு 8.5 டிகிரி செல்சியஸ், குன்னூர் 8.8 டிகிரி செல்சியஸ் ஆகிய வெப்ப நிலைகளை பதிவு செய்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்ப தால், அதிகாலை நேரங்களில் பயணிப்பவர்கள் மற்றும் முதியவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?