கடலூர் கிழக்கு மாவட்ட வாக்குச்சாவடி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “காமராஜர் இலவச ஆரம்ப கல்வியைத் தொடங் கினார். அதன் பிறகு நமது கலைஞர் உயர்கல்வியை இலவசமாக்கினார். அதன் பிறகுதான் பின்தங்கிய சமூகத்தில் இருந்த மாணவர்கள் கல்வியில் முன் னேறத் தொடங்கினர்” என்று குறிப்பிட்டார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறி வித்தபோது எல்லோரும் ரூ.1000 உரிமைத் தொகையை வழங்க முடியாது என்று சொன்னார்கள். ஆனால் அதை சாத்தியப்படுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின். தற்போது விடுபட்ட பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழ்நாடு முழுவதும் 1.30 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றார். இப்படி மகத்தான சாதனை படைத்த இந்த திட்டத்தை அன்புமணி குறை சொல்கிறார். அதிமுக, பாஜகவின் ஊதுகுழலாக அன்புமணி செயல்படுகிறார் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?