நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், செல்வப்பெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், செல்வப்பெருந்தகை வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை, அக். 28–


சென்னையில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், இன்று நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அதேபோல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், காவல்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதனால் அது புரளி என தெரியவந்தது.மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%