பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா: ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்
Oct 29 2025
13
ராணிப்பேட்டை, அக். 28–
ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 2025 ஆண்டு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், ஜெ.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்து மாணாக்கர்களின் கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் தலைமையிலான அரசு பள்ளி மாணவ மாணவியர்களின் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திருவிழா என்ற திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக கடந்த 2022-–2023 ஆம் ஆண்டு தொடங்கியது. 2025-–2026 ஆம் கல்வியாண்டில் 100 போட்டிகளைக் கொண்டு பள்ளி அளவில் போட்டிகள் தொடங்கப்பட்டது. அதில் 90304 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் பள்ளி அளவில் 11,139 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று ஒன்றியளவில் கலந்து கொண்டனர். ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற 1759 மாணவ மாணவிகள் மாவட்ட அளவில் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவ மாணவியர்களின் கலைத்திறன் மேம்பட உந்து சக்தியாக செயல்படும் அரசுக்கும், பங்கு பெற்று தன் திறமைகளை வெளிப்படுத்தும் நம் மாவட்ட மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், நகரமன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், முதன்மை கல்வி அலுவலர் பிரேமலா (பொறுப்பு), மாவட்ட கல்வி அலுவலர்கள் கிளாடி சுகுணா (இடைநிலை), பழனி (தனியார் பள்ளிகள்), பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ராஜலட்சுமி துரை, உதவி திட்ட அலுவலர் சுமதி சுபத்ராதேவி, தலைமையாசிரியர் பரிமளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?