நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமினை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
கொரடாச்சேரி, நவ.2- திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமினை திருவாரூர் அதிமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில், கண் புரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட நோய்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?