போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா
Sep 09 2025
21

பெங்களூரு,
கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, அரசு சார்பில் வழங்கப்பட்ட இனோவா காரை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில், சித்தராமையா பயன்படுத்தி வரும் கார் 7 முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதாவது, கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி சந்திரிகா ஹோட்டல் பகுதியில் சென்றபோதும், அதே ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி பழைய விமான நிலையச் சாலையில் லீலா பேலஸ் சந்திப்பு அருகிலும், ஆகஸ்ட் 20-ந்தேதி சிவானந்த சர்க்கிள் பகுதியிலும் காரில் சென்றபோதும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் சென்றுள்ளார். மொத்தம் 6 முறை சித்தராமையா சீட் பெல்ட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார். இது அந்தந்த பகுதிகளில் உள்ள நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு கடந்த ஜூலை 9-ந்தேதி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் ர் சித்தராமையாவின் காரை டிரைவர் வேகமாக ஓட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுள்ளார்.இந்த 7 போக்குவரத்து விதிமீறல்களுக்கும் போக்குவரத்து போலீசார் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்திருந்தனர். தற்போது பெங்களூருவில் போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு 50 சதவீத தள்ளுபடியில் அபராதம் செலுத்த போக்குவரத்து போலீசார் கால அவகாசம் வழங்கியுள்ளனர்.இந்த திட்டத்தின் கீழ் சித்தராமையா பயன்படுத்தும் காருக்கு விதிக்கப்பட்ட 7 விதிமீறல்களுக்கும் மொத்தம் ரூ.2,500 அபராதம் செலுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?