ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்தவர்கள் திரும்ப மாட்டார்கள்: உக்ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ வேதனை

கீவ்:

‘‘ரஷ்ய தாக்​குதலில் நொறுங்​கிய கட்​டிடங்​களை கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​களை திரும்ப வரு​வார்​களா?’’ என்று உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ தெரி​வித்​தார்.


அமெரிக்கா தலை​மையி​லான நேட்டோ ராணுவ படை​யில் சேர உக்​ரைன் திட்​ட​மிட்​டது. இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து உக்​ரைன் மீது ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. கடந்த 3 ஆண்​டு​களுக்கு மேல் இருதரப்​புக்​கும் இடை​யில் மோதல் நீடிக்​கிறது. இந்​நிலை​யில், உக்​ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா நேற்று மிகப்​பெரிய வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் தாய், 3 மாத குழந்தை உயி​ரிழந்​தனர். மேலும், 17 பேர் காயம் அடைந்​தனர். கீவ் நகரில் உள்ள கேபினட் அமைச்​சர்​களின் கட்​டிடத்​தின் மீது ரஷ்ய ட்ரோன்​கள் மற்​றும் ஏவு​கணை​கள் நேற்று தாக்​குதல் நடத்​தின. இதில் கட்​டிடத்​தின் மேல் தளங்​கள் தீப்​பற்றி எரிந்​தன.


இதுகுறித்து உக்​ரைன் விமானப் படை அதி​காரி​கள் கூறும்​போது, ‘‘கீவ் நகர் மீது ரஷ்யா ஏவிய 747 ட்ரோன்​களை சுட்டு வீழ்த்​தினோம். அதே​போல் ரஷ்​யா​வின் 4 ஏவு​கணை​களும் வீழ்த்​தப்​பட்​டன. ஆனால், 9 ஏவு​கணை​கள், 56 ட்ரோன்​கள் கீவ் நகரின் பல பகு​தி​களை தாக்​கின’’ என்​றனர்.


உக்​ரைன் பிரதமர் யுலியா சிவிர்​டென்கோ நேற்று செய்​தி​யாளர்களிடம் கூறும்​போது, ‘‘உக்​ரைனின் மிக முக்​கிய​மான அரசு கட்​டிடம் மீது ரஷ்யா நேற்று முதல் முறை​யாக தாக்​குதல் நடத்​தி​யது. நொறுங்​கிய கட்​டிடங்​களை நாங்​கள் மீண்​டும் கட்​டி​விடு​வோம். ஆனால், உயி​ரிழந்​தவர்​கள் திரும்ப வரமாட்​டார்​கள். இந்த சூழ்​நிலை​யில், ரஷ்​யா​வின் எண்​ணெய், காஸ் விஷ​யத்​தில் கடுமை​யான பொருளா​தார தடை விதிக்க வேண்​டும்’’ என்று வேதனை​யுடன் தெரி​வித்​தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%