
மறதி ஒரு வசதியா..
மறதி ஒரு அவதியா..
மனதுக்குள் கேள்வி எழுந்ததே.. விடை மட்டும் மறந்து போனதே.
வாக்குறுதி தந்தவனும் மறக்கிறான்..
வாங்கிகிட்டு போட்டவனும் மறக்குறான்..
படித்தவனும் படிச்சதையே மறக்குறான்..
குடிச்சவனும் குடும்பத்தை மறக்குறான்..
கடன் வாங்கி மறுநிமிடம் மறதி..
கடன் கொடுத்தான்
தலையில் துண்டு உறுதி.
ஏழைப்பாழை இரவுவர
பட்டப்பாடு மறந்தான்..
ஏய்ப்பவனை இரவினிலே
குடித்ததனால் மறந்தான்...
நல்லதெல்லாம் மறந்தான்.. நடந்ததெலாம் மறந்தான்..
உள்ளவனோ தனைமறந்து இல்லாதவனை மறந்தான்..
மறப்போம் மன்னிப்போம் அரசியலில் சகஜம்.
மறதி ஒன்று இல்லையெனில் நாளெல்லாம் கலகம்.
மறதியே வாழ்க..
மறதியே வருக.. துயரங்களை மறப்போம்
மறதியே வாழ்க..
மறதியே தொடர்க
வாழ்நாளைக் கழிப்போம்.
*வே.கல்யாண்குமார்.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?