மலைகள்

மலைகள்


--------------------

பாறைகள்

கரம் கோர்த்து நிற்கும்

இயற்கையின் வேலிகளே!

மேற்கூரை இல்லாத

கோட்டைகளே!


நீங்கள்

வரம் பெற்ற பூதங்களா?

இல்லை

சபிக்கப்பட்ட அசுரர்களா?

காலந்தோறும்

பாறைகளாய்ப்

படுத்திருக்கும்

அகலிகைகளே!


எந்த ஸ்ரீராமனின்

பாதம்பட்டு

குறிஞ்சியாய்க்

குதூகலிக்கிறீர்கள்!


கரம் நீட்டாமல்

நீங்கள் செய்யும்

ஆசீர்வாதம் தான்

அருவிகளோ?

ஆகாயத்திற்கு

மனமுவந்து அளித்த

பரிசுகளோ

உருண்டு திரண்ட

கருமுகில்கள்!



கவிஞர் த.அனந்தராமன்

துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%