மனதில் சுமக்கிறேன்

மனதில் சுமக்கிறேன்



நீ 

தூக்கியெறிந்த

காதலைதான்

நான் 

தூக்கி சுமக்கிறேன் 

குழந்தையைப் போல 

காதலை மட்டுமல்ல 

உன்னையும் தான் 

உன்னை போல் 

நானும்

தூக்கியெறிந்திருந்தால் 

நம் காதல் 

அனாதையாகியிருக்குமே 

அதனாலதான் 

காதலை 

கண்ணில் வைத்து 

உன்னை 

நெஞ்சில் வைத்து

காதலுக்கு துணையோடும் 

உன் நினைவோடும்

ஒவ்வொரு நாளும் 

காத்திருந்து

வாழ்ந்து வருகிறேன்

உன் வருகைக்காக 

என் இதய வாசலை 

திறந்து வைத்து...



பாரதி முத்து

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%