tamilnadu epaper

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்


கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர், சிதம்பராபுரத்தில் வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையை ஏற்று அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர், எம்.ஆர்.வி.கவியரசன் அவர்களின் தலைமையில், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திமுக வை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ அவர்களின் முன்னிலையில் தங்களை‌ அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 

அவர்களுக்கு எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வரவேற்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். தொடர்ந்து கடந்த 10ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ மற்றும் எம்.ஆர்.வி.கவியரசன் வழங்கினார்கள்.