சென்னை, மே 21–
அதிமுக எதிர்க்கட்சியாக இருப்பதால், எதிர்ப்பதற்கு காரணம் இல்லை என தவெக புதுமையான விளக்கத்தை அளித்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று அளித்த பேட்டி:
திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்தார். அந்த நிலைபாட்டில் அவர் தெளிவாக உள்ளார். அதிமுக – பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என விஜய் அறிக்கை வெளியிட்டார். அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சியை எதிர்ப்பதற்கு காரணம் இல்லை. அதனால்தான் அதனை எதிர்க்கவில்லை”
இவ்வாறு அவர் கூறினார்.