கந்துவட்டி கந்தப் பன் வட்டிக்குக் கொடு த்து வாங்குவதில் அகாய சூரனாக இருந்தான்.
கந்தப்பன் இந்த மஞ்சக்குடி கிராமத்துக்கு எப்படி வந்தான், எப்போது வந்தான் என்று எவருக்குமே தெரியாது.
அதிக வட்டிக்குக்
கொடுத்து,அசலும் வட்டியும் கொடுக்க முடியாத ஒரு குடும்ப
த்திடமிருந்து எண்பது ஆண்டு பழமையான வீட்டை அபகரித்து செய்து அந்த வீட்டிலேயே குடியேறி விட்டதாக பொது மக்கள் மத்தியில் பேசிக் கொள்வதும் உண்டு.
கந்தப்பனின் வட்டி ப் பிடிக்குள் வசமாக மாட்டிக்கொண்ட ஏழை விவசாயி, காளிமுத்து விவசாயத்திற்காக வாங்கிய கடன் தொகை ஒரு லட்சத்தை த் தொட்டுவிட, அதனை த் திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட, கந்தப்பன் காளிமுத்துவிடம் இன்னும் ஒரு வாரத்திற்குள் நீ வாங்கியத் தொகையை அசலும் வட்டியுமாய் கொடுக்காவிட்டால் நீ குடியிருக்கும் வீட்டை என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று கடுமையாக பேசிவிட்டு சென்று விட்டான்.
இதனால் காளிமுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டான்.அவனது மனைவி, மற்றும் மகள்களும் இரண்டு தினங்களாக கலங்கிப் போயிருந்தனர். மழைக்காலம் என்பதால் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து விடாது மழை பெய்தும் கொண்டிருந்தது.நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி தெருக்களி
லும் மழைநீர் ஒடிக் கொண்டிருந்தது.
அன்றிரவு காற்றுடன் கூடிய மழை தொடர்ந்தது.
மறுநாள் காலை 6 மணியளவில் சற்று மழை குறைந்த நிலையில் காளிமுத்து குடியிருக்கும் தெரு வாசிகளில் சிலர் பக்கத்துத் தெருவை நோக்கி கூட்டமாக கூச்சலிட்டவாறே ஒடிக் கொண்டிருந்தனர்.
மழைக்காலம் என்பதாலும், தொடர்ந்து இரண்டு தினங்களாக பெய்த மழையினாலும், அந்தோ பரிதாபம்,
கந்துவட்டி கந்தப்பனின் அறுபதாண்டு பழைய வீடு முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமாக்கி இருந்தது.
கந்தப்பனும் அவனது குடும்பத்தினரும் இடிந்து விழுந்த வீட்டுக்குள் சிக்கிக் கொண்டு மடிந்து போயிருந்தனர்....இதனை
கிராமத்து மக்கள் பரிதாபத்தோடு நின்று வேடிக்கை ப்
பார்த்து கொண்டிருந்தனர்.
++++++++++++++++++
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.