அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் வெள்ளிக்கிழமை யன்று கிரீன்லாந்திற்கு பயணம் மேற் கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டொனால்டு டிரம்ப் அமெரிக்கா ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கனடா, பனாமா கால்வாய், கிரீன்லாந்து உள்ளிட்ட பிரதேசங்களை அமெ ரிக்காவின் மாகாணங்களாக ஆக்கிரமிக்கப் போவதாக தெரிவித்து வந்தார். மேலும் இதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளார். தேவைப்பட்டால் ஆயுத பலத்தை கூட பயன்படுத்துவேன் என கடந்த சில வாரங்களுக்கு முன் மிரட்டல் விடுத்திருந்தார்.
வான்ஸ் இன் பயணத்திற்கு முன்னதாக அவரது மனைவி உசா வான்ஸ் அமெரிக்க எரிசக்தித்துறை செயலாளர் கிரிஸ், தேசிய பாது காப்பு ஆலோசகர் மைக் வாட்ஸ் ஆகியோருடன் வியாழனன்று கிரீன்லாந்து செல்கிறார். இந்த பயணத்திற்கு கிரீன்லாந்து மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த பயணத்தின் போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் ராணு வத்தளத்திற்கு துணை ஜனாதிபதி உள்ளிட்ட அமெரிக்கா அதிகாரிகள் செல்லலாம் என கூறப்படுகின்றது.
டிரம்ப்பின் பதவியேற்புக்கு முன்னதாகவே அமெரிக்கா சார்பில் ஒரு குழு கிரீன்லாந்திற்கு சென்றது. அப்போது கிரீன்லாந்து, இது சுயாதீன ஆட்சிப்பகுதி எனவும் அமெரிக்காவின் ஒரு பகுதி யாக மாற விரும்பவில்லை என்று கிரீன்லாந்து பிரதமர் முடே எக்டே தெரிவித்திருந்தார்.
இந்த பயணத்திற்கு முன் உசா வான்ஸ், நமது இரு நாடுகளுக்கிடையிலான மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடவும், வரும் ஆண்டுகளில் எங்கள் உறவு வலுவாக வளரும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தவுமே கிரீன்லாந்து செல்வதாக தெரிவித்திருந்தார். இந்த கருத்து கிரீன்லாந்து அரசியல் தலைவர்களிடையே கடுமையான கோபத்தை எழுப்பியுள்ளது. கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் அணுகுமுறை “மிகவும் ஆக்ரோஷமானது” என அந்நாட்டின் பிரதமர் முடே குற்றம் சாட்டியுள்ளார்.
எங்கள் மீது அதிகாரத்தை திணிப்பது என்ற அமெரிக்காவின் நோக்கம் தெளிவாக உள்ளது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.