மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்
கேட்டுகடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறந்து நீர்மோர், சர்பத், தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அன்பன்கல்லானை, வழிகாட்டுதலின் பேரில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட மகளிரணி சுஜா, ஏற்பாட்டில் சோழவந்தான் மாவட்ட செயலாளர்
விஷால்கிருஷ்ணா, கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், சர்பத், மற்றும் தர்பூசணி உள்ளிட்டவைகள் வழங்கினர். அருகில் மகளிரணி நிர்வாகிகள் கதீஜா, உமாமகேஸ்வரி, வீரலட்சுமி, தனலட்சுமி, மாவட்ட நிர்வாகிகள் ரோஷன் மேலூர் மணிமாறன், ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜய்ஹரிஷ், ரஞ்சித், காளை, ராமநாதன், வெங்கடேஷ், ரகு, விஜய், உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.