திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில். பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். இன்று 16.4.2025 புதன்கிழமை காலை பெரிய நாயகர் பராசக்தி அம்மன் திருக்கோயிலிலிருந்து புறப்பட்டு பகல் 12.00 தாமரை குளம் சென்றடைய பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குளக்கரையிலுள்ள இராஜா மண்டபத்தில் அபிஷேகம், குமரகோயிலில் மண்டகப்படிக்கு பின் காமாட்சி அம்மன் கோயில் தெரு வழியாக மாடவீதி திருக்கோயில் சென்றடைதல். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை