tamilnadu epaper

ஆண். பெண்

ஆண்.    பெண்

படிக்கதெரியாத ஆண்களிடம்

கிடைக்க கூடாத புத்தகம் பெண்

ரசிக்க தெரியாத பெண்களிடம்

கிடைக்க கூடாத ஆபரணம் ஆண் 


2.         பிரச்சினைகள்

பிரச்சினைகள் ஒரு போதும்

உங்களிடம் நீண்ட காலம் தங்கி

இருக்க போவது இல்லை

அவைகள் உங்கள் வாழ்க்கையில்

ஏதேனும் அனுபவத்தை ஏற்படுத்தி

விட்டு சென்று விடும்


3.            உருவம்

உருவம் என்பது பெற்றோர் நமக்கு

கொடுத்த  அடையாளம்

ஒழுக்கம் என்பது நமது 

அடையாளதுக்கு நாம் கொடுக்கும்

உருவம்


4.               தவறு


ஆடம்பரத்தை விரும்புவது 

தவறு இல்லை.   ஆனால்

ஆரம்பத்தை மறப்பது தான் தவறு

5.           வாட்ஸ் அப் 

பத்து வருஷத்துக்கு முன்னாடி

ஒரு கிளி ஜோசியர் சொன்னார் 

உங்களுக்கு நிறைய வரும்

நீங்கள் அடுத்தவருக்கு கொடுத்து

கொண்டே இருப்பீர்கள் என்றார்

அது வாட்ஸ் அப் மெசேஜ் என்பது

இப்போது தான் தெரிகிறது


நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி