அசாத்ய சாதக ஸ்வாமிந் | அசாத்யம் தவகிம்வத | ராம தூத க்ருபாசிந்தோ | மத் கார்யம் சாதய ப்ரபோ|
ஸ்ரீ ராமபிரானின் மிக சிறந்த பக்தர் அனுமனின் கோவில்.
கேரள மாநிலம் - மலப்புறம் மாவட்டத்தில், திரூர் என்ற ஊரின் அருகே அமைந்துள்ள அழகான ஆலயம்..
3000 வருடம் பழமையான இந்தக் கோவில் சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரால் நிர்மாணிக்கப் பட்டது என்று கையேடுகளில் காணப்படுகிறது.
ஶ்ரீராமர் ,ஆஞ்சநேயர்,லஷ்மணன் இந்தக் கோவிலின் வழிபாட்டு தெய்வங்கள்.
ராமாயணத்தில் ராவணன் சீதாபிராட்டியை சிறை பிடித்து இலங்கையில் அசோக வனத்தில் சிறை வைக்க ,தனது பத்தினியை கண்டு பிடித்து மீட்க ,ராமர் அனுமனின் சேவையை நாடினார்..அப்போது அனுமனை தனது தூதன் என்று சீதை அறிய தனது மோதிரத்தை அளித்த ராமர், அது போதாது என்று கருதி ,அனுமனிடம் தனக்கும் சீதைக்கும் மட்டுமே அறிந்த கடந்த கால நிகழ்ச்சி (அபிஞ்ஞான வாக்கியம்) ஒன்றைக்
சீதாபிராட்டிக்கு அனுமனிடத்தில் கூறுகிறார்..
சன்னதி உள்ளே சென்றால் ராமரின் அற்புதமான தரிசனம் .
வில்லும் அம்பும் வாங்கி ராமருக்கு சமர்ப்பணம் செய்தல் இங்கே வழிபாடுகளில் ஒன்று..ராவணனுடன் போருக்கு தயாராகிறார் அல்லவா?.
அவரை வழிபட்டு இடதுபுறமாக நகர்ந்தால்
ஶ்ரீராமனின் சொல் கேட்க காதை அவர் அருகில் கொண்டு செல்வதைப் போல ,சாய்ந்து நிற்கும் திவ்ய ரூபத்தில் அனுமனை தரிசிக்கலாம்..
அனுமனின் ராம பக்தியை உணரலாம்..
இங்கே அவரது கதை (ghadai) சமர்ப்பணம் வழிபாடுகளில் ஒன்று..
ராமர் அனுமனிடம் கூறியதைக் கேட்காமல்
இருப்பதற்காக சிறிது தூரம் மாறி நிற்கும் லட்சுமணனுக்கு ஒரு கோவில் இருக்கிறது.
பிரதான சன்னதி ஶ்ரீராமருக்கு என்றாலும் ,ஆலத்தியூர் ஹனுமான் காவு என்றே இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது..
கோவிலின் பிரதான விசேஷங்கள் ஶ்ரீராமருக்கு என்றாலும் ,பக்தருக்கு பக்தனான அனுமனின் அருள் நாடி வரும் மக்கள் கூட்டம் அதிகம்..
ராமர் தனது பத்தினியைத் தேட கடல் தாண்டி அனுமனைத் தனியாக அனுப்புவதைக்காண முப்பத்து முக்கோடித்தேவர்களும் வந்ததாக ஐதீகம்..
தனக்கு உதவ விஸ்வரூபியான பகவான் தனது பக்தனை நாட ,அனைத்து கடவுளரும் தேவர்களும் தங்களது சக்தி முழுவதையும் அனுமனுக்கு ஈன்றனர்..அனுமனின் தேடும் படலம் வெற்றி பெறக் காரணமானதால்,
இங்கே அவரின் சக்தியும் ,காரியசித்தியும் உணரப்படுகிறது...தான்,தனது ராமபிரானால் அங்கீகரிக்கப் பட்டதைப் போல, தனது பக்தர்களையும் அனுகிரக்ஹம் செய்கிறார் வாயு மைந்தன்..
தியாகத்தின்உருவமான ஆஞ்சநேயர் ராமருக்கு உறுதி அளிக்கிறார், "உங்களது விருப்பமே எனக்கு ஆணை" என..
எனவே இங்கு வந்து தரிசனம் செய்யம் பக்தரின் பிரார்த்தனை நிறைவேறும் என்பதில் ஐயமில்லை..
அனுமனின் இலங்கைப் பயணம் தொடங்கியதைக் குறிக்க ஒரு நீண்ட கல் நடைபாதையின் முடிவில் ,கடல் அங்கே தொடங்குவதைக் குறிக்கிறது .
"மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது" என்பதற்கேற்ப சிறிய கோவில் என்றாலும் ஒரு முறை தரிசனம் செய்தலே நலம் பயக்கும்.
-சோபனா விச்வநாதன்