எட்டயபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதைப் போல நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முடித்த மருது பாண்டியன்,பவித்ரா மற்றும் அனுஸீ ஆகிய மூன்று மாணவர்களுக்கு விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலர் ஞானவேல் பதக்கங்கள் அணிவித்து பட்டங்களை வழங்கினார்.
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சியில் தலைமை ஆசிரியர் மு.க.இப்ராஹிம் இத்தகையச் செயல் சிறந்த முன்னெடுப்பெனப் பொதுமக்கள் பாராட்டினர். இவர் சென்ற கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த மாணவர்களை குதிரை மேல் அமர வைத்து ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சியில், பள்ளியின் ஆசிரியர் இந்திரா, மாணவ - மாணவிகள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.