tamilnadu epaper

இலங்கை டூ தனுஷ்கோடிக்கு 10 மாணவர்கள் நீந்தி சாதனை

இலங்கை டூ தனுஷ்கோடிக்கு  10 மாணவர்கள் நீந்தி சாதனை

ராமேஸ்வரம், ஏப். 12– -

இலங்கை முதல் தனுஷ்கோடி வரை கடலில், 34 கி.மீ.,க்கு மகாராஷ்டிரா மாணவர்கள், 10 பேர் நீந்தி சாதனை படைத்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூரை சேர்ந்த 7ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், 10 பேர் மும்பையில் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்று, பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 

இம்மாணவர்கள் அதிக நீரோட்டம் உள்ள பாக்ஜலசந்தி கடலில், இலங்கை முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடக்க முடிவு செய்தனர். அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து 10 மாணவர்கள் மற்றும் உறவினர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் என, 21 பேர் இரு விசைப்படகுகளில் புறப்பட்டு, இந்திய– இலங்கை கடற்படை பாதுகாப்புடன் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

வியாழக்கிழமை காலை, 6.30 மணிக்கு தலைமன்னார் கடலில் குதித்து மாணவர்கள் நீந்த துவங்கினர். அதிக நீரோட்டம், கொந்தளிப்பு காரணமாக நீந்துவதில் சவாலாக இருந்தது. விடா முயற்சியால், 34 கி.மீ., துாரத்தை நீந்தி இரவு, 8 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர்.