செய்யாறு மே. 13,
செய்யார் அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் காமாட்சி அம்பாள் கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆலய குரு சங்கர் குருஜி மூலவரான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்தார். பின்னர் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .முன்னதாக பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.