சிவராமன் 'பிஸ்னஸ் மேட்டர்' ஆக சென்னை செல்ல வேண்டி' ட்ராவல்ஸ் பஸ்' ல் முன்பதிவு செய்திருந்தார். படுக்கை வசதி கொண்ட 'ஏசி பஸ்' . திருநெல்வேலி
டூ சென்னை செல்லும் 'பஸ்' . இவர் எற
வேண்டிய இடம் திருச்சி சென்ட்ரல்.
இரவு பதினோரு மணிக்கு வர வேண்டிய 'பஸ்' ஐந்து நிமிடம் தாமதமாகவந்தது . 'பஸ்'ல் ஏறியவர் தனக்கு ஒத்துக்கப்பட்டிருந்த நம்பர் பதினொன்று 'லோயர் பர்த்' யை தேடினார். அவர் இடத்தில் ஓர் இளம் பெண் படுத்திருந்தாள். இவரை பார்த்ததும் போர்த்திருந்த போர்வையை விலக்கி காலை காட்டினாள். காலில் கணு காலுக்கு கீழே ' பேண்டேஜ்'
போட்டிருந்தாள். ஏதோ கால் முடியாதவள் என்று புரிந்து கொண்டு, அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 'அப்பர் பர்த்' ல் இவர் ஏறி படுத்துக்கொண்டார்.'அப்பர் பர்த்' என்பதால் சிரமப்பட்டுத்தான் பயணம் செய்தார்.
தாம்பரம் வந்தவுடன் அவர் இறங்க, அவளும் "சார் கொஞ்சம் 'ஹெல்ப்' பண்ணுங்க... " கேட்க ,அவரும் அவளை கை தாங்கலாக 'பஸ்' லிருந்து இறக்கி விட்டார்.
ரொம்ப 'தேங்க்ஸ் சார்' என்றவாறே
ஆட்டோவை அழைத்தாள். இவரும் வேறு ஆட்டோவை பிடித்து செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றார்.
சிவராமன் நாள் முழுக்க ஆக வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு,
'நெல்லை எக்ஸ்பிரஸ் 'ல் திருச்சி திரும்ப
எக்மோர் ஸ்டேஷனில் காத்திருந்தார்.
'ட்ரெயின்' கிளம்பும் நேரம் எட்டு நாற்பது. எட்டு மணிக்கே வந்து விட்டார். 'டைம் பாஸ்'
க்காக 'மொபைல்'ஆன்செய்து பார்த்துக் கொண்டிருந்தார். பின் சீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்களின் சிரிப்பொலி அவரின் கவனத்தை திரும்பியது.
"நேத்து வந்த' பஸ்' ல வயசான இளிச்சவாயன் மாட்னாரு... கால்ல பேண்டேஜ் போட்டு கால் முடியலன்னு
ஏமாத்தி 'லோயர் பர்த்'ல நிம்மதியா
தூங்கிக்கிட்டு வந்தேன்... இன்னைக்கி இந்த 'ட்ரெயின்'ல எந்த இழிச்ச வாயான ஏமாத்துறதுன்னு தெரியல..." கேட்டவுடன்
நேற்று ஏமாற்றப்பட்டது தான் தான் என்று
தெரிந்துகொண்டார்.
சிவராமனுக்கு இளைஞர்களைப் பற்றி
தன் மனதில் இருந்த உயர்ந்த எண்ணம்
இப்படிப்பட்ட ஒருசிலரால் உடைந்து
போனது.
-சுகபாலா,
திருச்சி.