எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.. என தமிழ் முழக்கம் செய்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இலக்கிய வளமும் கற்பனை ஆற்றலும் கருத்து கருவூலமும் கொண்ட நம் அன்னை தமிழ் மொழி உலக அரங்கில் உயர்ந்திட அருண் மணி ஆற்றிய தமிழ்ச் சான்றோர்கள் புலவர்கள் கவிஞர்கள் ஏராளம் ஏராளம்.
இன்று இந்தியாவில் எட்டு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். உலகில் உள்ள மலேசியா சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட 232 நாடுகளில் 2 கோடி தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் தமிழ் மொழியை தங்கள் சுவாசமாக கருதுகிறார்கள். ஒரு இனத்தை அடையாளப்படுத்துவது மொழியே ஆகும். மொழி இல்லையேல் இனம் இல்லை. இனம் இல்லையேல் மொழி இல்லை. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து இணைந்துள்ளது. மொழி அழிந்தால் இனம் அழிந்து விடும். தமிழ் மொழியிலிருந்து 72 மொழிகள் பிறந்து கிளைத்துள்ளன என தமிழ் சான்றோர்கள் கூறுகிறார்கள்..
ஐநா சபையில் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுன்ஸ்கேஅமைப்பு 1999 ஆண்டு நடைபெற்ற அமர்வில் பிப்ரவரி 21 ஆம் நாளை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது. உலகின் பல்வேறு சமூக மக்களின் மொழி பண்பாட்டு தன்மை ஒற்றுமை உணர்வு இவைகளை கருத்தில் கொண்டு பிப்ரவரி 21 ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது. 2000 ஆண்டு முதல் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் தாய்மொழி நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றன. ஒரு நாட்டின் தாய் மொழியை அந்த நாட்டின் அடையாளமாகும் நம் தமிழ் மொழியின் பெருமையைச் சொல்வதற்கு பண்டைய இலக்கண நூலான தொல்காப்பியத்தை கூறலாம். . உரைநடை கவிதை போன்றவைகள் எழுதப்பட்டு அதன் பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு இலக்கண எழுதப்படும் என்பது அனைவருக்கும் தெரியும். . நம்முடைய உண்மையான நூல் தொல்காப்பியம் என்பதிலிருந்து நம் தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றலாகாலத்து முன் தோன்றிய மூத்த குடி என்பதை உணர முடிகிறது. . அது மட்டுமல்ல உலகில் அதிக அளவு மொழி பெயர்க்கப்பட்ட வாழ்வியல் நூல் என்கிற பெருமையை திருக்குறள் பெற்றிருக்கிறது. . வாழ்கின்ற நாம் ஒவ்வொருவருக்கும் மொழிப்பற்று தேவை. தமிழ் எங்கள் அடையாளம் தமிழ் எங்கள் அங்கீகாரம் தமிழ் எங்கள் உரிமை தமிழ் எங்கள் உணர்வு தமிழ் எண்கள் கர்வம் தமிழ் எங்கள் பெருமிதம் என்று ஒவ்வொரு தமிழன் நினைக்க வேண்டும். . தாய் மொழியில் கல்வி கற்பதன் மூலம் நாம் அனைத்தையும் விரைந்து புரிந்து கொண்டு செயல்பட முடியும். .. உலகத் தலைவர்கள் மகாத்மா காந்தி ரவீந்திரநாத் தாகூர் திலகர் பாரதியார் பாரதிதாசன் உள்பட அனைவருமே தங்களின் தாய் மொழியின் மீது பற்று வைத்திருந்ததை அவர்களின் வரலாறு படிக்கின்ற போது உணரலாம்..
தம்முடைய தேசிய கவி பாரதியார் கூறுவதை கேளுங்கள். . கலைச் செல்வங்கள் யாவும் கொண்டு சேர்ப்பீர் என்கிறார். அது மட்டுமா பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்று தன் ஆசையும் வெளிப்படுத்துகிறார். தமிழ்மொழி வளர்ச்சி பெற பிற நாட்டின் எழுதி இருக்கின்ற சிறந்த படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிற பாரதியின் ஆசை இப்போது தமிழக அரசின் மூலம் நிறைவேறி வருகிறது. .. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கிற முழக்கத்தோடு தமிழக இப்போது தங்கள் மொழியை சிறப்பை உணர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். . கடைகளில் இருக்கின்ற விளம்பர பலகைகளில் தமிழ் பெயர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்கள் தமிழ் வழியில் திருமணம் என்று இப்போது தமிழ் எங்கும் மணம் வீசி வருகிறது. உயர்தனிச் செம்மொழியான தமிழை இன்பத் தமிழை போற்றி நாம் வளர்த்திட வேண்டும். வாழிய மணித்திரு நாடு என்ற பாரதியின் வரிகளை நினைவு கொள்வோம் தமிழ் மொழியையும் தமிழர்களையும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிற தாய்மொழி கற்போம் தமிழ் மொழி கற்போம். . நம்முடைய இதிகாச நூல்களையும் தமிழ் இலக்கிய நூல்களையும் போற்றி பாதுகாத்து அவைகளை இளைஞர்கள் தம் வாழ்வில் ஏற்றுக் கொண்டு அவர்கள் அதன் வழியில் நடப்பார்கள் ஆனால் தமிழ் மொழி உயரும் தமிழ்நாடு உயரும். வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற கவிஞரின் வரிகளை நினைவில் கொண்டு உலக தாய்மொழி தினத்தில் நம்முடைய தாய் மொழியான யர்தனிச் செம்மொழியான தமிழை வளர்ப்போம் போற்றுவோம்.. வணங்குவோம்.
ந. சண்முகம் திருவண்ணாமலை