tamilnadu epaper

ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்

ஊழலில் கர்நாடகா முதலிடம் என முதல்வரின் ஆலோசகர் கருத்து: எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம்

பெங்களூரு:

கர்​நாடக மாநிலம் கொப்​பலில் மாகாணங்​களுக்கு இடையே​யான ஏற்​ற​தாழ்வை தீர்ப்​பது தொடர்​பான கருத்​தரங்​கம் நேற்று முன் தினம் நடை​பெற்​றது.


இதில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் பொருளா​தார ஆலோ​சகர் பசவ​ராஜ் ராயரெட்டி பேசியதாவது: கர்​நாட​கா​வில் யார் முதல்​வ​ராக இருந்​தா​லும், எந்த கட்சி ஆட்​சி​யில் இருந்​தா​லும் ஊழல் அதி​க​மாக நடை​பெறுகிறது. ஊழலில் எப்​போதும் கர்​நாடகா முதலிடத்​தில் இருக்​கிறது.


அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் நிறைந்​திருப்​ப​தால் தரமான வளர்ச்சி பணி​கள் நடை​பெறு​வ​தில்​லை. சுதந்​திரத்​துக்கு முன்பு கட்​டிய அரசு கட்​டிடங்​கள் இப்​போதும் கம்​பீர​மாக இருக்​கின்​றன. தற்​போது கட்​டப்​படும் கட்​டிடங்​கள் 10 ஆண்​டு​களில் இடிந்து விழுகின்​றன.


கல்​யாண கர்​நாடகா பகு​தி​யில் ஊழல் இன்​னும் அதி​க​மாக உள்​ளது. ஊழல் மிகப்​பெரிய அளவில் நடை​பெறு​வ​தால் அந்த பகு​தி​யில் மாகாண ரீதி​யான ஏற்​ற​தாழ்​வு​கள் அதி​க​மாக காணப்​படு​கின்​றன.


மக்​கள் பிர​தி​நி​தி​கள் ஊழல்​வா​தி​களாக இருந்​தால், அரசு அதி​காரி​களும் அப்​படி​தான் இருப்​பார்​கள். இது தொடர்​பாக முதல்​வர் சித்​த​ராமையா என்ன ஆணை போட்​டாலும், அதனை அவர்​கள் பின்​பற்ற மாட்​டார்​கள். இவ்வாறு அவர் தெரி​வித்​தார். பசவ​ராஜ் கருத்தை சுட்​டிக்​காட்டி பாஜக, மஜத ஆகிய எதிர்க்​கட்​சி​யினர் காங்​கிரஸ் அரசை விமர்​சித்து வரு​கின்​றனர்.