tamilnadu epaper

எங்கள் ஊர் தாண்டிக்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் தாண்டிக்குடி சிறப்புகள்

எங்கள் ஊர் தாண்டிக்குடி தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சி, பழனி சட்டமன்றத் தொகுதிக்கும் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

 

 

தாண்டிக்குடி என்ற பெயரானது தற்போது பழநி முருகனின் உடன் இணைத்து இங்கிருந்து பழநி மலைக்கு முருகன் தாண்டியதாகவும் அதனால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கிபி 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த குலசேகர பாண்டியனின் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் தான்றிக்குடி என்று பதிவாகியுள்ளது. அதாவது தான்றி எனும் ஒருவகை மரம் இப்பகுதியில் மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது. மலைப்பகுதியில் மட்டுமே செழித்து வளரும் இந்த தான்றி மரத்தின் காய்கள் பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக சொல்லப்படுகிறது. தான்றிக்குடி எனும் பெயர் காலப்போக்கில் மருவி தாண்டிக்குடி என்றும் சொல்லப்படுகிறது. . அதோடு பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் போதே ஆங்கிலேயர் ஒருவர் இம்மலைப்பகுதியில் குடும்பத்துடன் தங்கி 2000 க்கும் அதிகமான இந்நிலத்திற்கே உரித்தான அரிய தாவர வகைகளையும் அதன் மூலிகை குணங்களையும் விரிவாக பதிவு செய்திருக்கிறார். 

 

எங்கள் தாண்டிக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல் 

 

• கடுகுதடிபுதூர் 

 

• கூடம்நகர் 

 

• கொட்டகொம்பு 

 

• பட்லாங்காடு 

 

• தாண்டிக்குடி 

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமான எங்கள் தாண்டிக்குடி சொர்க்கத்தில் இருந்து தவறி மண்ணில் விழுந்த ஒரு துண்டு போல தான் காட்சியளிக்கிறது. பெரும்பாலும் "ஆதா கொடை" அல்லது அரை கொடைக்கானல் என்று குறிப்பிடப்படுகிறது. இதமான வானிலை, அழகிய இயற்கை காட்சிகள், வசீகரமான பள்ளத்தாக்குகள் என நம் மனதை மயக்கும் பண்புகளை கொண்ட இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் மலையேறுபவர்களின் சொர்க்கமாகவும் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு இங்கு வாழ்ந்த கற்கால குள்ள மனிதர்களின் குடியிருப்புகளையும் நீங்கள் காணலாம்! 

 

இயற்கை அன்னை வண்ணமயமான ஓவியங்களை வரைந்திருக்கும் இடம் தாண்டிக்குடி, அழகான மலைகள் பல மறைக்கப்பட்ட கதைகளைச் சொல்கிறது. இது பெரிய மற்றும் கம்பீரமான மற்றும் பிரமிக்கவைக்ககூடிய வகையில் நம் மனதை மயக்குகிறது. உயரமான மலைகள், அடர்ந்த காடுகள் மற்றும் முடிவில்லாத காபி தோட்டங்களின் விரிவு ஆகியவை தாண்டிக்குடியை அதன் அனைத்து மகிமையிலும் நிறைவு செய்கின்றன 

 

தாண்டிக்குடி மலையில் இயற்கை எழில் கொஞ்சும் முருகன் கோவில் உள்ளது. குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதைப் போல இங்கும் முருகன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.