புதுக்கோட்டையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காரைக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் திருமயம். திருமயம் என்பது திருமெய்யம் என்ற பெயரில் இருந்து வந்தது. திருமயம் வடமொழி சொல்லான சத்திய ஷேத்திரம் என்ற பெயரில் இருந்து உருவானது. இங்கு கோட்டை அருகில் இருக்கும் சிவன் மற்றும் பெருமாள் கோயில்கள் சத்யகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி கோயில்கள் சத்திய ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.
திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாத சேதுபதி எனும் கிழவன் சேதுபதி அரசனால் 1676 இல் கட்டப்பட்டது. இந்த கோட்டை பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .பாஞ்சாலங்குறிச்சி தலைவன் கட்டபொம்மனின் சகோதரன் ஊமைத்துரை இந்த கோட்டையில் தான் சிறை பிடிக்கப்பட்டார் .இந்த கோட்டை உள்நாட்டில் ஊமையன்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரைக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன .இதில் சிவன் விஷ்ணு ஒரே இடத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் இடையே சுவர் எழுப்பி விஷ்ணு சந்நிதி சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் ஆகவும் சிவன் சன்னதி சத்தியகிரீஸ்வரர் கோவில் ஆகவும் ஆக்கப்பட்டது. மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார் குடவரை கோவிலில் சிற்பங்கள் அழகாக உள்ளது .கோவிலில் வேணுவனேஸ்வரி அம்பாள் சந்நிதி உள்ளது வேணுவனேஸ்வரி என்பதற்கு மூங்கில் காட்டு அரசி என பொருள்படும் .இந்த பகுதியில் மூங்கில் காடுகள் அதிகம் இருந்ததால் இந்த பெயரை அந்தப் பகுதி அம்மனுக்கு வைத்திருக்கலாம்.
சத்யகிரீஸ்வரரை மனதார நினைத்தால் பாவம் தீரும். தொழிலில் வெற்றி ,திருமண தடை நீங்கும், குழந்தை பேறு, உண்டாகும், என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை .மகாவிஷ்ணு மெய்யர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றார் .அவர் இங்கு வந்து எழுந்தருளியதால் திருமெய்யர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது .
இந்த ஊரில் தான் இந்திய விடுதலை வீரரும் காங்கிரஸ் தலைவருமான இந்த சத்தியமூர்த்தி 1882ல் பிறந்தார்
திருமயம் என்ற நகரம் பழமையும் போற்றுதலுக்கும் உரிய வரலாற்றைக் கொண்டதாக இருக்கிறது .முத்தரையர்கள் கிபி 8 கிபி 9ஆம் நூற்றாண்டுகளில் பெருமையும் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டுயிருக்கலாம். திருமயம் பல்லவர்கள் சோழர்கள் பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள் இப்படி பலரால் ஆளப்பட்டு உள்ளது. 16, 17 நூற்றாண்டுகளில் ராமநாதபுரம் சேதுபதியின் உள்ளடக்கிய பகுதிகளை ஆளுகைக்கு கொண்டு வந்தார் .
திருமயத்தில் மற்றொரு சிறப்பு கோட்டை பைரவர் கோவில் ஆகும் .இந்த கோவில் 350 ஆண்டுகளுக்கு பழமையான. திருமயம் கோட்டையை சுற்றி அமைந்துள்ளதை.இந்த கோட்டை பைரவர் பாதுகாப்பதால் தான் இந்த பைரவர்க்கு கோட்டை பைரவர் எனப்படுகிறார். தமிழகத்தில் வடக்கு பார்த்த தனிக்கோவில் கொண்டு அருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும் .சகலதோஷ பரிகாரத்திற்கான தலமாக இது விளங்குகிறது. கோட்டை பைரவர் கால பைரவர் அம்சம் ஆவார் .இவரை தேய்பிறை அஷ்டமி என்று வழிபட்டால் நன்மைகள் ஓடி வந்து சேரும்.
திருமயம் நகருக்கு ஒருமுறை வாருங்கள் கோட்டையின் அழகை சுற்றிப் பார்த்து திருமையரை வழிபட்டு கோட்டை பைரவரின் முழுமையான அருள் பெற்று செல்லுங்கள்.