tamilnadu epaper

எங்கள் தேசத்தின் வளர்ச்சி  ***

எங்கள் தேசத்தின் வளர்ச்சி   ***

 

யார் சொன்னது?

எங்கள் தேசம் 

இன்னும் வளரவில்லை என்று!

 

இங்கே பாருங்கள்....

பத்து ரூபாய் பணம் கொடுத்தே

மலம் கழிக்கும் வளர்ச்சியும்

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

முப்பது ரூபாய்க்குத் 

தண்ணீர் வாங்கிக் குடித்தும்

தாகம் தீராத வளர்ச்சியும்

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

முன்னூறு ரூபாய்க்கு 

மூனு இட்டிலி பத்துச் சட்டினி

இருட்டறையில் ருசித்திடும் வளர்ச்சியும் 

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

ஐநூறு ஆயிரம் கடன் வாங்கியாவது

மது(சா)க்கடையில் மயங்கும் வளர்ச்சியும்

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

கடற்கரை ஓரமெல்லாம்

கண்ணாடிக் கற்களால் ஆனச் சமாதிகள்

முன்னாடி நிற்கிறது. 

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

தெருவுக்கு தெருக்

கம்பி வேலிக்குள் ஒலிந்துக் கிடக்கும் 

தலைவர்களின் சிலைகள் எல்லாம் 

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

சாதி சங்கக் கொடிகளும்

அரசியல் கட்சிகள் கொடிகளும்

அங்கங்கே அடிதடியில்தான் பறக்கிறது.

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

பேருந்துக் கட்டணத்தை விட

விமானக் கட்டணமே குறைவாக உள்ளது.

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

இங்கே பாருங்கள்....

இலட்சங்களைக் கொடுத்து தான்

இலட்சிய கல்வியை 

இலட்சனமாகப் படிக்கிறோம்.

எங்கள் தேசத்தில் தானே இருக்கிறது!

 

யார் சொன்னது?

எங்கள் தேசம் வளரவில்லை என்று!

 

கரும்பு விளையும் வயலில்

கல் நடவு செய்து வருகிறோம்!

ஆற்றை அள்ளி காற்றைக் கிள்ளி

நூற்றுக்கணக்கான கோடி அள்ளுகிறோம்!

மலையை அழித்துக் காட்டை அழித்துக்

மூச்சுவி முழிக்கிறோம்!

 

பாருங்கள் இங்கே.....

 

இதயத்தை மறந்து

இணையத்தில் விழுந்து 

இரவுப் பகலாக 

இரத்த ஓட்டம் நிற்கும் வரை

இழக்கிறோம் கவனத்தையும்....

இழக்கிறோம் காலத்தையும்......

 

வத்தலாபுரம் முருகேசன்