சாந்துப் பொட்டுக்காரி
சலசலக்கும் பேச்சுக்காரி
ஆண்
ஓரக்கண்ணாலப் பாத்துக்கிட்டு
ஒதுங்கியே போவதென்ன
பாசாங்கு பண்ணாதடி
பவிசாத்தான் போகாதடி
பெண்
நானொன்னும் பாக்கலியே
பொய்யேதும் பேசாதீங்க
வம்பளத்துப் போகாதீங்க
வம்பாகப் போகுமுங்க
ஆண்
ஒம்மனசு தெரியமடி
ஒய்யாரமாப் போறவளே
ஆசையிருக்கு மனசுல
ஆனாலும் சொல்லமாட்டியே
பெண்
நெஞ்சுக்குள்ளே ஒன்னமில்ல
நெனப்பெல்லாம் ஏதுமில்லை
எல்லைமீறி பேசாதீங்க
எடக்காக ஆயிடுங்க
ஆண்
சாந்துப் பொட்டுக்காரி
சலசலக்கும் பேச்சுக்காரி
சங்கதியெல்லாம் தெரியுமடி
பாசாங்கு காட்டாதடி
பெண்
உண்மையை ஒத்துக்கிறேன்
உள்ளதெல்லாம் கண்டுபிடிச்சிட்டியே
அரும்பு மீசக்காரா
அன்பான பாசக்காரா.
-பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்