tamilnadu epaper

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-15.05.25

வாசகர் கடிதம் (உஷா முத்துராமன்)-15.05.25


அன்புடையீர்,


 வணக்கம் 15.5.25 அன்று தமிழ்நாடு இ பேப்பரின் முதல் பக்கத்தில் நமது ஜனாதிபதி அவர்கள் முப்படை தளபதிகளை சந்தித்த படமும் செய்தி மிக அருமையாக இருந்தது இன்றைய பஞ்சாங்கம் நல்ல நாளாக எனக்கு அமைய உதவி செய்தது கொடநாடு வழக்கிலும் விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படும் என்பது நல்ல செய்தி


இன்றைய திருக்குறள் மிகவும் அருமையாக பொருள்னு படிக்கும் போது மன நிம்மதி கிடைத்தது. டெல்லியில் மூவர்ணக் கொடி யாத்திரை என்ற செய்தி படம் பார்க்கும் போது பாரத மாதா கி ஜே என்று மனம் சொன்னது.


குடி பழக்கமுடையவர்கள் நிச்சயம் அல்லல் படுவது உண்மை. அப்படி குடிப்பதனால் குடியால் லிவர் கிட்னி மற்றும் மற்ற அங்கங்கள் பாதிக்கப்படும் என்ற நலம் தரும் மருத்துவம் செய்தி பயனுள்ள தகவல். இதனால் குடிப்பழக்கம் உள்ளவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள உதவுவது உண்மை.


அரசியல் என்ற பக்கத்தில் வந்த எல்லா செய்தியுமே மிகவும் அருமையாக ஆர்வமுடன் படிக்க வைத்தது. கடன் தொல்லையால் விபரீத முடிவு எடுத்த தம்பதிகளை பற்றி படித்தவுடன் மனம் வேதனையில் மூழ்கியது.


தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வாஞ்சிநாதன் வரலாறு மிகவும் அருமை நல்ல அருமையான வரலாற்றுச் செய்தி மனம் நிறைந்த பாராட்டுக்கள்.


பல்சுவைக் களஞ்சியம் பகுதியை விரும்பி ஆர்வமுடன் படித்து ரசித்து மகிழ வைத்தது. மீம்ஸ் ஜோக்ஸ் விடுகதை எல்லாமே மிகவும் அருமை. 


வாங்க சம்பாதிக்கலாம் பகுதி மிகவும் அருமை. நல்ல தகவலாக இருப்பதால் பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்களுக்கு நல்ல பயனுள்ள தகவலாக இருப்பது உண்மை. 


வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் என்ற செய்தியும் மஞ்சள் நீராட்டு விழா அம்மனுக்கு என்ற செய்தி என்று ஆன்மீகமும் அரசியலும் நல்ல நல்ல தகவல்களை படங்களுடன் சொன்னது பாராட்டுக்குரியது.


ஜி லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம் நல்ல அருமையான தகவல். அன்றும் இன்றும் என்றும் அருணாச்சலம் எங்களுடையது என்று இந்தியா திட்ட வட்டமாக சொன்னது அரசியலை நன்றாக புரிய வைத்தது.


கிரேம் கார்னர் அருமையான செய்திகளை எங்களுக்கு கொடுத்தது விழிப்புணர்வை கொடுத்தது. ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை மோசடி பிரச்சனை தீர்ந்தது என்று தேர்தல் கமிஷன் தகவல் சொன்னது அருமையாக இருந்தது பாராட்டுக்கள்.


இந்தியாவுடனான முதல் 11 வீரர்கள் உயிரிழப்பு உறுதிப்படுத்திய பாகிஸ்தான் என்ற ராணுவம் என்ற செய்தி நிலைமையை நன்கு விளக்கியது இந்தியா பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரில் அமெரிக்கா தடுத்து நிறுத்தியது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன செய்தி அரசியலை நன்றாக புரிய வைத்தது.


எல்லா பக்கங்களிலும் அருமையான செய்திகளை கொடுத்து எங்களுடைய புதிய விடியல்களை புத்துணர்வுடன் தொடங்க உதவும் தமிழ்நாடு பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.


நன்றி 

-உஷா முத்துராமன்