எண்பது வயது ஆறுமுகம் வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அசை போட்டார் .
ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர் ஆறுமுகம் . 1990 களில் வேலையில் இருந்தவர் .
அவர் வேலை பார்த்த காலத்தில் தன்னுடன் மற்றும் அடுத்த பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியரை பத்தி மேல் அதிகாரிகளுக்கு மொட்டை கடிதம் எழுதி அனுப்பிடுவார் . மொட்டை கடித ஆறுமுகம் என்ற மறைமுக பெயரும் உண்டு . பலர் வேலை இழந்து தண்டனையும் பெற்று இருந்தனர்.
அவருக்கு தான் செய்வது தவறு என்று தெரியவில்லை சரி என்றே நினைத்தார் .
காலங்கள் ஓடியது ஓய்வு பெற்றார் . ஒரு மகன் சாலை விபத்தில் இறந்து போனான் . இன்னொரு மகனுக்கு திருமணம் செய்து மருமகள் வாழவில்லை . மகள் இருவருக்கும் குழந்தை இல்லை . கடைசி மகனுக்கு திருமணமே நடக்கவில்லை . குடும்பம் நிம்மதி இல்லாமல் இருந்து வந்தது .
தன் வினை தன்னைச் சுடும் என்பது போலவும் முற்பகல் செய்யின் பிறப்பகல் விளையும் என்பதும் உண்மை தான் என்று வயது எண்பது கடந்து புரிந்தது ஆறுமுகத்திற்கு .
மொட்டை கடிதம் எழுதியதின் எதிரொலி தான் இது என்கிற மொட்டை கடிதமும் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து கொண்டு இருந்தது .
இன்று மனமும் உடலும் சுட்டது ஆறுமுகத்திற்கு , தேள் கொட்டியது போல் துடியாய் துடித்தார் முதுமை சுமையும் பின் தொடர வாழ வழி தெரியாமல் தவித்தார் ஆறுமுகம்.
முடிந்தால் நல்லது செய் முடியாவிட்டால் கெடுதல் செய்யாமல் இரு என்கிற வாழ்க்கை ரகசியம் இப்போது தான் புரிந்து கொண்டார் ஆறுமுகம் .
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
- 9842371679 .