tamilnadu epaper

எருக்கூர் உத்திராபதியார் சுவாமிக்கு அமுது படையல் விழா

எருக்கூர் உத்திராபதியார்   சுவாமிக்கு அமுது   படையல் விழா


சீர்காழி , ஏப் , 30 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எருக்கூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும்

அருள்மிகு உத்திராபதியார் சுவாமிக்கு

131-வது ஆண்டு 

அன்னதான தர்ம அமுது படையல் விழா நடைப்பெற்றது. 

சோழவள நாட்டில் புண்ணிய நதியாகிய காவேரி நதிக்கு வடக்கே பன்னிரு திருநாமம் கொண்ட

காழியம்பதிக்கு வடபாலுள்ள எருக்கூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ உத்திராபதியார் சுவாமிக்கு

 அமுது படையல் தர்மத்தை முன்னிட்டு பகலில் ஸ்ரீ பிச்சாண்டவமூர்த்தி

வீதியுலாக்காட்சியும் மாலை சுவாமி புறப்பாடும் பக்தர்களுக்கு அன்னதானமும், இரவு முதல் இரண்டு இரவுகள்

புராண புண்ணிய நாடகங்கள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வருகை தந்து தரிசித்து அருள்மிகு

உத்திராபதியார் சுவாமியின் திருவருளை பெற்றார்கள். நிகழ்ச்சி வர்ணனையை பட்டி மன்ற நடுவர் சீர்காழி டாக்டர் கே.ஆர்.சரவணன் செய்தார்.