ஏங்க! உங்களத்தான்! இவனை கொஞ்சம் சத்தம் போடக்கூடாதா?" என தன் மகன் தருனைப்பற்றி புகார் வாசித்தாள் தருன் அம்மா செல்வி.
"என்னடி செய்தான்?" என்று மனைவியை கேட்டார்" />
"ஏங்க! உங்களத்தான்! இவனை கொஞ்சம் சத்தம் போடக்கூடாதா?" என தன் மகன் தருனைப்பற்றி புகார் வாசித்தாள் தருன் அம்மா செல்வி. "என்னடி செய்தான்?" என்று மனைவியை கேட்டார் சுகுமார். "ஒண்ணா ரெண்டா? வீடு முழுதும் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கிறான்! அவன் இன்னும் ஸ்டிக்கர் ஒட்டாதது என் முதுகும் உங்க முதுகும் தான்!" என ஆவேசப்பட்ட செல்வியை அடக்கி விட்டு தருனை அழைத்தார் சுகுமார், " நானும் பாக்கறேன்! வீட்டில் உள்ள எல்லா பொருள்களிலும் ஏதாவது ஒரு ஸ்டிக்கரை ஒட்டுற ஏன்டா இப்படி பண்ற? பாத்ரூம்ல 'சத்தம் போடாதே' அப்டீனு ஸ்டிக்கர் ஒட்டி வச்சிருக்க! கிச்சன்ல 'உள்ளே வர அனுமதி இல்லை' அப்டீனு ஒட்டி வச்சிருக்க! உனக்கு என்ன பைத்தியமாடா?" என தன் பத்து வயது பையன் தருனை இருவரும் மாறி மாறி திட்டித் தீர்த்தார்கள். பதிலுக்கு தருன் சிரித்துக்கொண்டே ஓடினான் இவனுக்கு எங்கிருந்து தான் இந்த ஸ்டிக்கர் கிடைக்குதோ? ' என நொந்தபடி வேலைக்குக் கிளம்பினார் சுகுமார். சுகுமாருக்கு பிளட் பேங்கில் சமூக சேவை போல ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இரத்தம் தேவைப்பட்டால் தான் சொந்தமாக வைத்து இருக்கும் மெடிக்கல் ஷாப்பை சிறிது நேரம் மூடிவிட்டு உடனடியாக இரத்தத்தை கொடுக்க வேண்டிய இடத்தில் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விடுவார். இதை தன்னார்வமாக பல வருடங்களாக சத்தமில்லாமல் செய்து வருகிறார் சுகுமார். அன்று வழக்கம் போல அவசரமாக இரத்தம் குறிப்பிட்ட இடத்தில் சில நிமிடங்களுக்குள் சேர்க்க வேண்டும் என்று சுகுமாருக்கு போன் கால் வர படு வேகமாக கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சிட்டாகப் பறந்து இரத்தத்தை வாங்கிக் கொண்டு சேர்க்க வேண்டிய இடத்துக்கு விரைந்து கொண்டிருந்தார் சுகுமார். ஆனால் போகிற வழியிலெல்லாம் போலீஸார் கூட்டம் கூட்டமாக ஒவ்வொரு வாகனத்தையும் பொறுமையாக சோதித்துப் பின் அனுப்பினர். விசாரித்ததில் பஸ் கன்டக்டருக்கும் போலீசு க்கும் பிரச்சினை எனவும் அதனால் ஆங்காங்கே சோதனை என்கிற பெயரில் தடுப்புகளை வைத்து எல்லாப் பேருந்துகளையும் நிறுத்தி நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தனர் போலீஸார். இது தவிர டூ வீலர் கூட நகர முடியவில்லை. பயங்கர டென்ஷனில் சுகுமார் செய்வதறியாது நிற்கும் போது அருகில் வந்த ஒரு போலீஸ் காரர் "என்ன சார்! நீங்கள் இப்படி போக முடியாது. வேறு பக்கம் போகலாம்! வாங்க!" என்று ஏதோ தெரிந்தவர் போல சுகுமாரை அனுப்பி வைத்தார். "யார் இவர்? சரியான சமயத்தில் வந்து உதவி செய்திருக்கிறாரே! நாம் எதற்காக போகிறோம் என விசாரிக்க கூட இல்லையே! " எனக் குழம்பியவாறே வேகமாகச் சென்று குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு போய் சேர்த்து விட்டார். டாக்டர் ஆச்சர்யத்துடன், "வழியில் ஏதோ பிரச்சினை எனக் கேள்விப்பட்டேன்! சரியான நேரத்தில் இரத்தம் கொண்டு வந்து ஒரு உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்! யாரும் செய்ய முடியாத ஒன்றை செய்திருக்கிறீர்கள் கீப் இட் அப்! " எனப்பாராட்டிவிட்டு டாக்டர் கிளம்பினார். உயிர் பிழைத்த நோயாளியின் குடும்பமே சுகுமாரை வாழ்த்தியது. நினைத்துப் பார்க்க முடியாத நேரத்தில் கரெக்டாக செய்து முடித்த சுகுமாரை எல்லோரும் பாராட்டினாலும் சுகுமார் மண்டையைக் குடைந்த கேள்வி ஒன்றுதான். அது எல்லோரையும் நிறுத்தி வைத்த போலீஸ்காரர் நம்மை மட்டும் அதுவும் முன்பின் தெரியாத ஒரு போலீஸ்காரர் எப்படி போக விட்டார்? 'என்பதுதான்.. பல குழப்பத்தோடு வண்டியை நெருங்கிய போது தான் கவனித்தார் வண்டியின் முன்பக்கத்தில் "போலீஸ்" என்கிற வாசகம் ஒட்டியிருந்ததை! சுகுமாருக்கு அப்போதுதான் புரிந்தது. "போலீஸ்" என ஒட்டியிருந்த ஸ்டிக்கரைப் பார்த்துதான் அந்த போலீஸ்காரர் நம்மை பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார். தருன் விளையாட்டாய் பண்ணியதுகூட ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கே என தருனை நினைத்துப் பெருமிதம் கொண்டார்.. எல்லாம் 'அவன்' செயல் என எல்லாவற்றுக்கும் காரணமான தன் மகனை நினைத்துப் பூரித்துப்போனார் சுகுமார். -பிரபாகர்சுப்பையா மதுரை- 12.. Breaking News:
எல்லாம் அவன் செயல்