tamilnadu epaper

ஏர் இந்தியாவிற்கு வார்னர் கண்டனம்

ஏர் இந்தியாவிற்கு வார்னர் கண்டனம்

வெங்கி குடுமுலா இயக்கத் தில் நிதின், ஸ்ரீ லீலா நடிப்பில் உருவாகியுள்ள “ராபின் ஹுட்” திரைப்படத்தில் ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி ஞாயிறன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வ தற்காக இந்தியா வந்த டேவிட் வார்னர் ஹைதராபாத் வந்தடைய, தில்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்திற்கு முன்பதிவு செய்துள்ளார். ஆனால் விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக வார்னர் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்க தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் வார்னர்,”விமானத்தை இயக்க விமானி இல்லை என தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கி றீர்கள்?” என காட்டமான கேள்வியுடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமனதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ள நிலையில், அடுத்த சில மணிநேரங்களில் வார்னர் ஹைதராபாத் வந்தடைந்தார்.