tamilnadu epaper

ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கு தயாராகும் தோட்டக்கலைத் துறை

ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கு தயாராகும் தோட்டக்கலைத் துறை

ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கு தோட்டக்கலைத் துறையினா் தயாராகி வருகின்றனா்.


சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள கோடை விழாவுக்காக, ஏற்காடு தோட்டக்கலைத் துறையினா் பசுமைக் குடிலை உருவாக்கி 2 லட்சம் மலா் விதைகளை 10 ஆயிரம் தொட்டிகளில் நட்ட நிலையில், அவை தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன.


ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை கவா்வதற்கு 40 ஏக்கா் பரப்பளவில் உள்ள ஏற்காடு தாவரவியல் பூங்காக்களில் ஆயிரக்கணக்கில் மலா்த் தொட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. புல்தரைகளில் வட்ட வடிவில் நடப்பட்ட சால்வியா செடிகள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. மேலும், கொல்கத்தா டோலியா செடிகள், மாரிகோல்ட் பூச்செடிகளை நட்டு சுற்றியும் மூங்கில் தட்டிகளை கட்டி வளா்த்து வருகின்றனா்.


பசுமைக் குடில்களுக்கு மலா்த் தொட்டிகளை மாற்றும் பணிகளை செய்து வரும் தோட்டக்கலைத் துறை பணியாளா்கள், மலா்ச் செடிகளுக்கு நீா் பாய்ச்சி பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.