இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், ஆசிரியர் ஆ.பிரேம்குமார் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். பள்ளியின் சார்பில் பயனாடை போர்த்தப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவர்கள் சார்பில் க.தவ வில்வ ஜோதிகா நன்றி கூறினார். மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் இனிப்பு, காரம், குளிர்பானம் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.