2023 இல் ஐரோப்பிய நாடுகளில் குழந்தை களிடையே காசநோய் (TB) தொற்று 10 சதவீதம் உயர்ந்துள்ளது என புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. காசநோய் தொடர்ந்து பரவுகின்றது, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 2023 இல் 15 வயதுக்குட்பட்ட 7,500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2022 ஐ விட 650 பேர் அதிகமாகும்.