பக்கத்து வீட்டு மாமியின் குரல் கேட்டது. போச்சு. துருவித் துருவி கேட்பாங்களே. டபாய்க்க முடியாது. இருவரின் சத்தமும் கேட்டிருக்கும்.

 

"வாங்க. சமைச்சுகிட்டு இருக்கேன்"

 

என்ன மறைத்தாலும் குரலும் கண்களும் காட்டிக்" />

tamilnadu epaper

ஒரு பிடி அட்வைஸ்

ஒரு பிடி அட்வைஸ்

மாலதி"

 

பக்கத்து வீட்டு மாமியின் குரல் கேட்டது. போச்சு. துருவித் துருவி கேட்பாங்களே. டபாய்க்க முடியாது. இருவரின் சத்தமும் கேட்டிருக்கும்.

 

"வாங்க. சமைச்சுகிட்டு இருக்கேன்"

 

என்ன மறைத்தாலும் குரலும் கண்களும் காட்டிக் கொடுத்து விட்டன. 

 

"இன்னிக்கும் சண்டையா' மாமி நேரடியாய் விசாரித்தார்.

 

" ஆமா. என்ன பேசினாலும் தகராறு. ஆபிஸ் கிளம்புற அவசரம். ஈவ்னிங் வந்து வச்சுக்கிறேன்னு போயிட்டார்"

 

மாலதி பொருமினாள்.

 

ஓரமாய் மூடி வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்தார் மாமி. 

 

"இதென்ன பழைய சாதம்'

 

'என்னதான் பார்த்துப் பார்த்து சமைச்சாலும் மிஞ்சிருது. ரெண்டு பேருக்கு சமைச்சாலே இதே தொல்லை"

 

கொதித்த சாம்பாரில் ஒரு துளி ருசித்தாள். "ஸ்ஸ் காரம். ரெண்டு மிளகாய் தான் போட்டேன்"

 

கூட்டு, கறியில் உப்பு தூக்கல். ரசத்தில் நீர். "என்ன செய்யிறதுன்னே புரியல. " மாலதி அலுத்துக் கொண்டாள்.

 

மாமி சிரித்தாள். "சாதம் வச்சாச்சா"

 

"இதோ"  

 

மாலதி எடுத்த அரிசியில் ஒரு கைப்பிடி மாமி கைக்கு மாறியது.

 

 "ரொம்ப சிம்பிள். எது போட்டாலும் ஒரு பிடி, ஒரு அளவு குறைச்சிரு. டேஸ்ட்டும் சரியா வந்துரும். மிஞ்சியும் போகாது"

 

மாலதி வியந்தாள். "அட". 

 

மாமி கண் சிமிட்டினாள்.

 

"பேசும்போதும் ஒரு பிடி வார்த்தையைக் குறைச்சிரு. வெட்டி சண்டை வராது"