tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-06.05.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-06.05.25

'மாயாவை மறந்தவன்' என்ற ஜனனி அந்தோணி ராஜின் சிறுகதை, காதல் தோல்வியின் வலியை மட்டுமல்ல, உண்மை காதலின் நாகரிகத்தையும் உணர்த்தியது.


  'முயற்சி வெற்றி வழியே செல்லும்' என்ற சுமதி முருகனின் சிறுகதை, எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும், உண்மையான உழைப்பும் முயற்சியும் மகாத்தான வெற்றியை தரும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.


'தெய்வத் திருமணங்கள்' ஆன்மிக கட்டுரை நிறைய தகவல்களுடன் அற்புத படைப்பாக இருந்தது.


  தினம் ஒரு தலைவர்கள் வரிசையில் முத்து வடுகநாதரைப் பற்றி படித்தேன். இவரைப் பற்றி நான் இப்போதுதான் முதன் முறையாக படிக்கிறேன். முத்து வடுகநாதர் சிவகங்கை சமஸ்தானம் ஆண்ட இரண்டாம் மன்னர் என்பதையும், இவர் இளம் வயதில் இருந்தே பல போர்களில் பங்கேற்று உடம்பெல்லாம் விழுப்புண் பெற்று வடு ஆனதால் முத்து வடு என்று பெயர் பெற்றார் என்பதை போன்ற அபூர்வமான பல தகவல்களை இந்த கட்டுரையினால் நான் அறிந்துக்கொண்டேன்.


  பல்சுவை களஞ்சியத்தில் 'தெய்வீகத் தியாகம்' என்ற நளினி கோபாலனின் கட்டுரை மனதை நெகிழ வைத்தது. இப்படி தியாகம் செய்த அந்த நல்ல மனிதர்கள் நிச்சயம் தெய்வத்திற்கு சமமானவர்கள்தான்.


  வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவில் பற்றிய நடேஷ்கன்னாவின் கட்டுரை நிறைய புள்ளிவிபரங்களுடன் அற்புதமாக இருந்தது. இந்த கட்டுரையை படித்ததிலிருந்து வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு ஒரு தடவை செல்ல வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.


  -சின்னஞ்சிறுகோபு,

    சிகாகோ.